திண்டுக்கல் மாவட்டத்தில் 7½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை; கலெக்டர் விசாகன் தகவல்


திண்டுக்கல் மாவட்டத்தில் 7½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை; கலெக்டர் விசாகன் தகவல்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் 7½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 7½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

குடற்புழு மாத்திரை

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி திண்டுக்கல் புனித சிறுமலர் தொடக்கப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். மேயர் இளமதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

குடற்புழு தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடல் சோர்வு, ரத்த சோகை, வைட்டமின் ஏ சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அந்த பாதிப்புகளை தடுக்க வகையில் ஆண்டுக்கு 2 முறை தேசிய குடற்புழு நீக்க தினம் கடைபிடிக்கப்பட்டு மாத்திரை வழங்கப்படுகிறது.

7½ லட்சம் பேருக்கு மாத்திரை

அப்போது ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள அனைவருக்கும், 20 வயது முதல் 30 வயது வரையுள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இதில் ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 4 (200 மி.கி.) மாத்திரைகளும், 2 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு ஒரு (400 மி.கி.) மாத்திரையும் வழங்கப்படும்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 7½ லட்சம் மாணவ-மாணவிகள், பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு 16-ந்தேதி வழங்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலம் மாத்திரை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா, மாநகராட்சி நகர்நல அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story