செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு - எழுத்தருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கி பாராட்டு


செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு - எழுத்தருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கி பாராட்டு
x

பதிவேடுகளை முறையாக பராமறித்த காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு ரூ.5,000 வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை,

சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இன்று தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தீடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள், குற்றச்சம்மந்த பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார்.

மேலும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரித்தார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

இதனையடுத்து காவல் நிலையத்தில் பதிவேடு அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு இருந்ததால் காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு ரூபாய் 5,000 வெகுமதி வழங்கினார். பின்னர் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த ஆய்வின் போது பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா, செம்மஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ரியாசுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story