மாநில சீனியர் பூப்பந்தாட்ட போட்டிக்கு தர்மபுரி மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு


மாநில சீனியர் பூப்பந்தாட்ட போட்டிக்கு  தர்மபுரி மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தமிழ்நாடு மாநில அளவிலான 68-வது சீனியர் சாம்பியன்ஷிப் பூப்பந்தாட்ட போட்டிகள் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 10-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தர்மபுரி மாவட்ட அணிக்கான பூப்பந்தாட்ட தேர்வு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் தர்மபுரி மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இதேபோல மாநில அளவிலான போட்டியில் சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற 24-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் கேரள மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் பங்குபெறும் தமிழக அணி சார்பில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று தர்மபுரி மாவட்ட பூப்பந்தாட்ட கழக செயலாளர் துரை தெரிவித்துள்ளார்.


Next Story