தர்மபுரி: ஏரியில் சேற்றில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு - மீன்பிடிக்க சென்றபோது விபரீதம்
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே பள்ளி விடுமுறையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற இரு சிறுமிகள் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே பள்ளி விடுமுறையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற இரு சிறுமிகள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தம்மனம்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி என்பவரது பிள்ளைகளான சிறுமிகள் சஞ்சனாஸ்ரீ, மோனிகாஸ்ரீ மற்றும் தமிழ் இனியன் ஆகிய மூவரும், வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள தம்மனம்பட்டி ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். தம்பியை கரையில் அமரவைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் ஏரியில் மீன் பிடிக்க இறங்கியுள்ளனர்.
அங்கு சேறு நிறைந்த பகுதிக்கு செல்லவே சேற்றில் சிக்கி உயிரிழிந்தனர். ஏரிக்கு சென்ற குழந்தைகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்தபோது, ஆண் குழந்தை மட்டும் கரையில் இருந்துள்ளான். சிறுமிகள் இருவரும் ஏரியில் மூழ்கியிருந்த நிலையில் சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடல் தர்மபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.