பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு வியாபாரிகள் தர்ணா


பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு வியாபாரிகள் தர்ணா
x

கிருஷ்ணகிரி அணையில் கடைகள் வைக்க ரகசிய ஏலம் விடுவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையில் கடைகள் வைக்க ரகசிய ஏலம் விடுவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர்.பி. அணை பூங்கா அருகிலுள்ள, மீன்கடை, குளிர்பான கடை, பழக்கடை உள்ளிட்ட மூன்று கடைகளுக்கு நேற்று ஏலம் நடப்பதாக இருந்தது. அப்போது அங்கு வந்த, 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் முறையான அறிவிப்பின்றி ரகசியமாக ஏலம் நடப்பதாக இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வியாபாரிகள் ரகசியமாக ஏலம் நடப்பதாக கூறி கே.ஆர்.பி. அணை உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கே.ஆர்.பி. அணை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ரகசிய ஏலம்

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை பூங்காவையொட்டிய கடைகளுக்கு ஏலம் விடுவதற்கான முறையான அறிவிப்பு இல்லாமல் ரகசிய ஏலம் நடக்க இருந்தது. தகவலறிந்து நாங்கள் ஏலத்தில் கலந்து கொள்ள வந்தோம். ஆனால் எங்களிடம் ஏலத்தில் கலந்து கொள்ள, முன்பணம் வாங்காமல் காலம் தாழ்த்தினர். பின்னர் ஏலத்தை ஒத்திவைப்பதாக கூறி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதை கண்டித்துதர்ணாவில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர்.

இது குறித்து கே.ஆர்.பி., அணை உதவி பொறியாளர் காளிபிரியன் கூறுகையில், நிர்வாக காரணங்களுக்காக இன்று நடக்கவிருந்த ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்பட்டு இது குறித்த நோட்டீசை ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அலுவலருக்கு வழங்குவோம் என்று கூறினார்.


Next Story