ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக பணியாளர்கள் தர்ணா போராட்டம்


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக பணியாளர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஆஸ்பத்திரியில் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்காலிக பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்தநிலையில் மனு கொடுக்க சென்ற 16 பேரை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்தது. இதை கண்டித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக பணியாளர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், அறிவிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story