கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் தர்ணா


கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் தர்ணா
x

கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி பொதுச்செயலாளர் திருப்பதி, துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் கருப்பையா, விவசாயிகள் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சங்கர், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும். மாவட்ட, நகரக் கூட்டுறவு வங்கி என தரம்பிரிக்காமல் அனைத்து ஊழியர்களுக்கும் 20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்திட வேண்டும். நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.


Next Story