கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் தர்ணா


கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் தர்ணா
x

கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

இ-டெண்டர் முறையை...

ஒப்பந்த மின் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் வட்ட கிளை சார்பில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த தர்ணா போராட்டத்திற்கு அமைப்பின் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார்.

அமைப்பின் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் ஒப்பந்த மின் ஊழியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மேலும், ஒப்பந்த மின் ஊழியர்களின் வேலையை பறிக்கும் இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும்.

தினக்கூலி வழங்க வேண்டும்

ஒப்பந்த மின் ஊழியர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மின் வாரியமே தினக்கூலி வழங்கிட வேண்டும். நிரந்த பதவிகளை நிரப்பாமல் காலிப்பணியிடங்களை அவுட்சோர்சிங் விடுகின்ற நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசும், மின் வாரியமும் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காலையில் தொடங்கிய தர்ணா போராட்டம் மாலை வரை நடந்தது.


Next Story