ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
மயிலாடுதுறையில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டுக்குறைகள் மற்றும் தீர்வு செய்யப்படாத பட்டியல்களை தீர்வு செய்ய வேண்டும், கொரோனா கால மருத்துவ பட்டியல்களை உடன் தீர்வுசெய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், ராமபத்திரன், கருணாநிதி, இணைச்செயலாளர்கள் ராயர், திருஞானசம்பந்தம், சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கலா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கணேசன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.