ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா


ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடைபெற்றது

தென்காசி

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று மாநில அளவில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதேபோல் தென்காசி மாவட்ட கருவூலம் முன்பு, அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சங்கரி உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் கால வாக்குறுதியில் வழங்கப்பட்ட 70 வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்கிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி, பணியாளர்கள், வன காவலர், ஊராட்சி உதவியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ெரயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் நாளுக்கு முந்தைய 6 மாதங்களில் ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்து ஆணைகள் வழங்க வேண்டும், ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை கோப்புகளின் மீது விரைவான நடவடிக்கை மேற்கொண்டு இறுதி ஆணைகளை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.



Next Story