மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா
x

சத்திரப்பட்டி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு வீரலப்பட்டி கிளை முன்னாள் செயலாளர் பாப்புச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன் சிறப்புரை ஆற்றினார். வீரலப்பட்டியில் சுத்திகரிப்பு செய்த குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள் முறையாக எரியச் செய்வது, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story