டிக்கெட் பரிசோதகர்கள் தர்ணா
டிக்கெட் பரிசோதகர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ரெயில் நிலைய டிக்கெட் பரிசோதகர்களை 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வருவாய் நிலை காட்டவில்லை என்று கூறி பணியிடமாற்றம் செய்வது உள்ளிட்ட திருச்சி ரெயில்வே கோட்ட வணிக நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து டி.ஆர்.இ.யு., சி.ஐ.டி.யு. தொழிற்சங்க டிக்கெட் பரிசோதகர்கள் கடந்த 9 நாட்களாக கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு செவி கொடுத்து மதிப்பளிக்காக திருச்சி கோட்ட கமர்சியல் நிர்வாகத்தை கண்டித்து நேற்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு டி.ஆர்.இ.யு. கோட்ட தலைவர் கரிகாலன் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி டி.ஆர்.இ.யு. பொதுச்செயலாளர் ஹரிலால், சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், டி.ஆர்.இ.யு. கோட்ட செயலாளர் மாதவன், துணை பொதுச் செயலாளர்கள் ராஜா, சரவணன், உதவி கோட்ட செயலாளர்கள் சம்பத்குமார், அழகிரி, ரஜினி, சிவக்குமார், தனபால் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.