தர்ணா போராட்டம்


தர்ணா போராட்டம்
x

நெல்லையில் தர்ணா போராட்டம் நடந்தது

திருநெல்வேலி

பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு மருத்துவக் கல்லூரி மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் தனியாா் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த பணியாளர்களாக ஆய்வக தொழிநுட்ப பணியாளர்கள், லிப்ட் ஆபரேட்டர் மற்றும் பல்வேறு மருத்துவ பிரிவுகளில் 90-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஆஸ்பத்திரி வளாகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கையில் தட்டுகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். கடந்த 2 மாத சம்பளம் நிலுவையில் உள்ளது. சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார், சம்பள நிலுவை தொகை குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் மூலம் ஒப்பந்ததாரரிடம் பேசி விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story