தர்ணா போராட்டம்


தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் தர்ணா போராட்டம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 11, 12, 13, 14 ஆகிய 4 வார்டுகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு தற்போது அந்த பகுதியில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையானது மிகவும் குறுகலான இடத்தில் உள்ளதால், பொதுமக்கள் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் சாலையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது புதிய ரேஷன் கடை கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிதாக கட்ட திட்டமிட்டுள்ள ரேஷன் கடையை அந்த பகுதியில் அமைக்க கூடாது என்று ஒருவர் இடையூறு செய்து வருவதாகவும், இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான ரேஷன் கடை அமைக்க முடியாமல் இருப்பதாகவும் கூறிவும் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து 12-வது வார்டு உறுப்பினர் இசக்கி துரைபாண்டியன் தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்பு நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்தனர்.

1 More update

Next Story