நில அளவை அலுவலர்கள் தர்ணா போராட்டம்


நில அளவை அலுவலர்கள் தர்ணா போராட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தர்ணா போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஏழுமலை முன்னிலை வைத்தார். மாவட்ட செயலாளர் சையத் ஜலால் வரவேற்றார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி சந்துரு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில தலைவர் ராஜா கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

போராட்டத்தில் கள பணியாளர்களின் பணி சுமையை குறைத்து பணியை குறைத்திட வேண்டும். நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும். நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இரவல் பணி மூலம் திட்டப்பணி மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு மலைப்படி, அளவை படி வழங்க வேண்டும். மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்டப் பணிகளை தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்படுத்திட வேண்டும்.

இணைய வழி உட்பிரிவு...

வருவாய்த்துறை நடைமுறை நிர்வாக பயிற்சி வழங்க வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு எனும் பெயரில் ஊழியர்களை தண்டனை குற்றவாளிகள் போல் நடத்துவதை கைவிட வேண்டும்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நில அளவை களப்பணியாளர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இணைய வழி உட்பிரிவு மனுக்களுக்கு கைப்பிரதி கோப்பு தயாரிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்க மாநில செயலாளர் மகாதேவன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்க மாவட்ட தலைவர் அண்ணாமலை உள்பட நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கன்னிவேல் நன்றி கூறினார்.


Next Story