விழுப்புரத்தில்அரசுப்பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


விழுப்புரத்தில்அரசுப்பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:45 PM GMT)

விழுப்புரத்தில் அரசுப்பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்


தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் காமராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் அருணகிரி, தமிழ்நாடு அரசு நுண்கதிர் தொழில்நுட்ப பணியாளர் சங்க மாநில தலைவர் சுந்தர்ராஜன், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரகுபதி, அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், சத்துணவு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 1.7.2022 முதல் வழங்கப்பட வேண்டிய 4 சதவீத அகவிலைப்படியை ரொக்கமாக வழங்க வேண்டும், அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன், இணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், தென்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் குமரவேல் நன்றி கூறினார்.


Next Story