பெல் தொழிற்சாலை முன்பு கேண்டீன் ஊழியர் குடும்பத்துடன் தர்ணா
சம்பள பாக்கி கேட்டு பெல் தொழிற்சாலை முன்பு கேண்டீன் ஊழியர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
ராணிப்பேட்டை
சிப்காட் காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலு (வயது 39). பெல் தொழிற்சாலை அமைக்க தனது நிலத்தை வழங்கிய நிலையில், பெல் தொழிற்சாலையில் உள்ள கேண்டீனில் வேலை பார்த்து வந்துள்ளார். கேண்டீன் ஊழியர்களை நிர்வாகத்தினர் வேறு பிரிவுகளில் பணிக்கு மாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் பாலுவிற்கு வேறு பிரிவுக்கு செல்ல விருப்பம் இல்லாததால் பலமுறை நிர்வாகத்திடம் கூறி வந்துள்ளார்.
அதே நேரத்தில் கேண்டீனில் பணியாற்றியதற்கான ஊதியம் வழங்காமல் அவரை அலைக்கழித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாலு நேற்று தனது குடும்பத்துடன் நிலுவலையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கூறி தொழிற்சாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story