ஸ்ரீமுஷ்ணம் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்


ஸ்ரீமுஷ்ணம் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 24 March 2023 6:45 PM GMT (Updated: 24 March 2023 6:46 PM GMT)

ஸ்ரீமுஷ்ணம் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினா்.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் மாங்காங்குளத்தெருவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு, அல்லி திருக்கல்யாணம், அரவான் களப்பலி, கர்ண மோட்சம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று(சனிக்கிழமை )மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேகம் நிகழ்ச்சியோடு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா தங்க.ஆனந்தன் மற்றும் மாங்காங்குளத் தெருவாசிகள் செய்து இருந்தனர்.


Next Story