சென்னாவரம் காளியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல், தீமிதி திருவிழா


சென்னாவரம் காளியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல், தீமிதி திருவிழா
x

சென்னாவரம் காளியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல், தீமிதி திருவிழா நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

சென்னாவரம் காளியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல், தீமிதி திருவிழா நடந்தது.

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதைெயாட்டி காளியம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் காளி வேடம் அணிந்த பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

அதனை தொடர்ந்து குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் விேனாத வழிபாடு நடத்தினர். பின்னர் கோவில் வளாகத்தில் அக்னிகுண்டம் ஏற்படுத்தப்பட்டு தீ வளர்க்கப்பட்டது. தொடர்ந்து வேண்டுதல் நிறைவேற வேண்டியும், நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டியும் ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story