திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x

திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

தாளவாடி

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று புறப்பட்டது. மாலை 4 மணி அளவில் லாரியானது திம்பம் மலைப்பாதையின் 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்து கரும்புகள் சாலையில் சிதறின. இதன்காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன. இதையடுத்து சாலையில் சிதறி கிடந்த கரும்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. கரும்புகள் அகற்றப்பட்டதும், இரவு 7 மணிக்கு போக்குவரத்து தொடங்கியது. 3 மணி நேரம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

Next Story