திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற கன்டெய்னர் லாரி- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற கன்டெய்னர் லாரி- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற கன்டெய்னர் லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

தாளவாடி

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற கன்டெய்னர் லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திரும்ப முடியாமல் நின்ற லாரி

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம்-கர்நாடக மாநிலம் இடையே முக்கிய போக்குவரத்தாக இந்த பாதை உள்ளது. இதில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் கன்டெய்னர் லாரி திரும்பும்போது திரும்ப முடியாமல் நின்றது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. பஸ், லாரி போன்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. இதனால் வாகனங்கள் மலைப்பாதையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த வேறு லாரி டிரைவர் கன்டெய்னர் லாரியை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரி குறுகிய வளைவில் இருந்து மீட்கப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது. லாரி திரும்ப முடியாமல் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story