திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
பாபநாசம் அருகே திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடந்தது.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலத்துறை கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பாபநாசம் வடக்குவீதி அருகே உள்ள குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து மேள தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்ததனர். பினனர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த திடலில் உள்ள அக்னி குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள்
தீமிதி திருவிழாவை காண அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வந்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், இளமாறன் மற்றும் போலீசார் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஆய்வாளர் லட்சுமி, மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story