கன்னம் சுருங்கிட நீயும்.. மீசை நரைத்திட நானும்... நூறு வயது கடந்த தம்பதிக்கு வைரவிழா கொண்டாட்டம்


கன்னம் சுருங்கிட நீயும்.. மீசை நரைத்திட நானும்... நூறு வயது கடந்த தம்பதிக்கு வைரவிழா கொண்டாட்டம்
x

தேன்கனிக்கோட்டையில் நூறு வயது கடந்த தம்பதிக்கு வைரவிழா மற்றும் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் ஊர்மக்கள் ஆசி பெற்றனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை டி.ஜி.தொட்டி கிராமத்தில் வசிக்கும் முனியப்பா (100 வயது), அவருடைய மனைவி குண்டம்மா (எ) மாரம்மா (96 வயது) ஆகியோர் நூறாண்டு கடந்து ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நூற்றாண்டு வைரவிழாவை குடும்பத்தார் இன்று கொண்டாடினர்கள்.

தேன்கனிக்கோட்டை கவி லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் நூறாண்டு கடந்து வைர விழா கொண்டாடும் தம்பதிக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத கெட்டி மேளம் கொட்டி மலர் மாலைகள் அணிவித்து திருமணம் நடைபெற்றது.

நூறு வயது கடந்த தம்பதியினருக்கு மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளூ பேரன், எள்ளு பேரன் என நான்கு தலைமுறையினர், உறவினர்கள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்று வாழ்த்து பெற்றனர்.


Next Story