நிழற்குடை முன் பாயும் கழிவுநீரால் பயணிகள் அவதி


நிழற்குடை முன் பாயும் கழிவுநீரால் பயணிகள் அவதி
x

நிழற்குடை முன் பாயும் கழிவுநீரால் பயணிகள் அவதி

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் தாராபுரம் ரோடு பலவஞ்சிபாளையம் பிரிவு அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. இதன் அருகே கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணி நிறைவடையாமல் உள்ளது. இதன் காரணமாக கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த கழிவுநீர் நிழற்குடை முன்பாக தேங்கி நிற்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. மேலும் நிற்பதற்கு இடமின்றி பயணிகள் நடு ரோட்டில் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. பயணிகள் கழிவு நீர் துர்நாற்றத்தால் அவதிப்படுவது ஒருபுறமிருக்க, ரோட்டில் பயணிகள் நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த ரோட்டில் எப்போதும் வாகனங்கள் அதிக அளவில் சென்று கொண்டிருக்கும். இவ்வாறு பரபரப்பாக வாகனங்கள் செல்லும் போது ரோட்டில் நிற்கும் பயணிகளின் மீது கழிவு நீர் தெறிக்கிறது. எனவே இங்கு கழிவுநீர் ரோட்டில் பாயாத வண்ணம் இருப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Next Story