புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பா?-டீன் விளக்கம்


புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பா?-டீன் விளக்கம்
x

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறந்துள்ளதா? என்பது குறித்து டீன் விளக்கம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு பிரசவ சிகிச்சையும், கர்ப்பிணிகளுக்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சையின் போது கடந்த 21 மாதங்களில் 247 பச்சிளம் குழந்தைகள் இறந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் பூவதியிடம் கேட்ட போது அவர் கூறுகையில், ''தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருந்ததற்கு பதில் அளிக்கப்பட்டதில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த குழந்தைகள் சிகிச்சை பலன் இல்லாமல், சிகிச்சை சரியில்லாமல் இறக்கவில்லை. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், எடைக்குறைவு, மூச்சுத்திணறல், பிறவி குறைபாடு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் தான் இறந்துள்ளன. ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்'' என்றார்.


Next Story