சமையல் செய்தபோது பரிதாபம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு


சமையல் செய்தபோது பரிதாபம்:  சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
x

சமையல் செய்தபோது பரிதாபம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள சானிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலையாளி. இவருடைய மனைவி ராமாயி (வயது 75). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியில் உள்ள விறகு அடுப்பில் தென்னை மட்டைகளை எரித்து சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் இருந்த தென்னை மட்டை வெடித்து அதில் இருந்து தீப்பொறி பறந்து ராமாயின் சேலையில் பிடித்தது. சிறிது நேரத்தில் தீ உடல் முழுவதும் பரவியதால் ராமாயி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமாயி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story