வாகனம் மோதி டிரைவர் சாவு
வாகனம் மோதி டிரைவர் சாவு
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள சி.தம்மண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 33). பள்ளி வாகன டிரைவர். இவர் நேற்று காலை 8.30 மணி அளவில் ஓசூரில் இருந்து கெலமங்கலம் சாலையில் அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தனியார் கிரானைட் நிறுவனம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக அவரது மனைவி நாகலட்சுமி (30) கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story