கெலமங்கலத்தில் ஏரியில் இளம்பெண் உடல் மீட்பு கொலையா? போலீசார் விசாரணை


கெலமங்கலத்தில்  ஏரியில் இளம்பெண் உடல் மீட்பு  கொலையா? போலீசார் விசாரணை
x

கெலமங்கலம் ஏரியில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கெலமங்கலம் ஏரியில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வாணியர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாந்தா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சிவகாந்தா மகளிர் சங்கத்தில் வாங்கிய கடனை திருப்பி கட்ட கணவர் பிரகாசிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த 4-ந் தேதி கணவரிடம் கோபித்து கொண்டு வீட்டை வீட்டு வெளியே சென்ற சிவகாந்தா பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மனைவியை கண்டுபிடித்து தரகோரி பிரகாஷ் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிவகாந்தாவை தேடி வந்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இந்த நிலையில் நேற்று காலை கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள ஏரியில் பெண் பிணம் கிடப்பதாக தகவல் பரவியது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தது வீட்டை விட்டு வெளியே சென்ற சிவகாந்தா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருமணமான 6 ஆண்டுகளில் இளம்பெண் இறந்ததுகுறித்து ஓசூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்திவருகிறார்.


Next Story