கந்திக்குப்பம் அருகே வீட்டில் தவறி விழுந்து நில அளவையாளர் சாவு


கந்திக்குப்பம் அருகே  வீட்டில் தவறி விழுந்து நில அளவையாளர் சாவு
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கந்திக்குப்பம் அருகே வீட்டில் தவறி விழுந்து நில அளவையாளர் சாவு

கிருஷ்ணகிரி

பர்கூர்:

கந்திக்குப்பம் அடுத்த குருவிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் திருமால். இவருடைய மனைவி வெண்மதி (வயது 38). நில அளவையாளர். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் வெண்மதிக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது.

இதற்கிடையே 8 மாத கர்ப்பிணியாக இருந்த வெண்மதி நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது தவறி விழுந்து அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கந்திக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story