மனைவி இறந்ததால் வேதனை: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


மனைவி இறந்ததால் வேதனை:   தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மனைவி இறந்ததால் வேதனை: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை அருகே உள்ள கெடக்கானூரை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த 14-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஆனந்தன் கடந்த 15-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தன் இறந்து விட்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

========


Next Story