வாகனம் மோதி சாலையை கடக்க முயன்றவர் சாவு


வாகனம் மோதி சாலையை கடக்க முயன்றவர் சாவு
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story