நண்பர்களுடன் குளித்தபோது குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவுஓமலூர் அருகே பரிதாபம்


நண்பர்களுடன் குளித்தபோது குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவுஓமலூர் அருகே பரிதாபம்
x
சேலம்

ஓமலூர்:

ஓமலூர் அருகே நண்பர்களுடன் குளித்தபோது குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவன்

ஓமலூரை அடுத்த நாரணம்பாளையம் மாதா கோவில் ஜெயராகினி பகுதியை சேர்ந்தவர் பீட்டர் (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி எலிசபெத் ராணி. ஓமலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சுஜி என்ற மகளும், சர்வின் ரிகாஷ் (14) என்ற மகனும் இருந்தனர்.

இதில் சர்வின் ரிகாஷ் காமலாபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று நண்பன் பிறந்தநாளையொட்டி 7 மாணவர்கள் சர்வின் ரிகாசின் வீட்டுக்கு வந்தனர். அங்கு அவர்கள் கேக் வெட்டி கொண்டாடி விட்டு கோட்டை மேட்டுப்பட்டி கிராமம் மோலப்பாறையில் உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றனர்.

உடல் மீட்பு

அங்கு அவர்கள் ஆனந்தமாக குளித்து விளையாடினர். அப்போது கல்லை எடுப்பதற்காக தண்ணீரில் மூழ்கிய சர்வின் ரிகாஷ் பின்னர் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி மாணவனை தேடினர். மேலும் ஓமலூர் தாசில்தார் வல்லமுனியப்பன் மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுமார் 3 மணி நேரம் போராடி மாணவர் சர்வின் ரிகாசை இறந்த நிலையில் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவர் குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story