பாப்பிரெட்டிப்பட்டி அருகேபட்டதாரி இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பட்டதாரி இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முதுகலை பட்டதாரி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடி பாரதிநகரை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. இவருடைய மகள் பிரியங்கா (வயது 25). இவர் எம்.எஸ்சி. முதுகலை படிப்பு முடித்துள்ளார். சேலத்தில் உள்ள தனியார் கடையில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரியங்காவை வேலைக்கு செல்ல வேண்டாம் என பெற்றோர் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. மேலும் பிரியங்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகவும் தெரிகிறது.
விசாரணை
இதற்கிடையே கடந்த 24-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பிரியங்கா விஷம் குடித்து மயங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியங்கா இறந்தார். இதுகுறித்து ஏ.பள்ளிபட்டி போலீசில் ராஜா கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.