பையர்நத்தத்தில்லாரி மோதி வடமாநில வாலிபர் பலி
பாப்பிரெட்டிப்பட்டி:
பையர்நத்தத்தில் லாரி மோதி வடமாநில வாலிபர் பலியானார்.
வாலிபர்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி- பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் பையர்நத்தத்தில் உள்ள ஒரு மளிகை கடை முன் கடந்த 29-ந் தேதி வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொம்மிடி போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி மோதி இறந்தார்
இதுதொடர்பாக பையர்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சுமதி பொம்மிடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மளிகை கடை முன்பு இறந்து கிடந்தது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரேந்திர கிஷன் (வயது 31) என்பதும், அவர் ெரயிலில் இறங்கியபோது, ரெயில் கிளம்பி விட்டதாகவும் அங்கிருந்து செல்ல வழி தெரியாமல் சென்றபோது லாரி மோதி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பொம்மிடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.