கந்தம்பாளையம் அருகே கார் மோதி முதியவர் சாவு
நாமக்கல்
கந்தம்பாளையம் அருகே
கார் மோதி முதியவர் சாவுகந்தம்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள கவுண்டிபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கருப்பன்(வயது 65), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தொட்டியம் தோட்டம் பஸ்நிறுத்தம் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி கரும்புக்கடை போட்டு விற்பனை செய்து வந்தார்.
அவர் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு தனது கரும்பு கடைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பன் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story