மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பேகாரஅள்ளியை சேர்ந்தவர் பொன்மாது (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி தேன்கனிக்கோட்டை- அஞ்செட்டி சாலையில் கீச்சில்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த பொன்மாதுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்மாது இறந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story