டீசல் திருடியவர் கைது


டீசல் திருடியவர் கைது
x

சாத்தான்குளம் அருகே டீசல் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே அரசூர் பகுதியில் தண்ணீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு டிராக்டரில் ஒரு பேரலில் 21 லிட்டர் டீசல் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த 21 லிட்டர் டீசலை நேற்றுமுன்தினம் மதுரை மாவட்டம் அய்யாப்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அழகுராஜா (வயது 32) என்பவர் திருடி செல்லும் போது நிறுவன சக ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து தட்டார்மடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் வழக்கு பதிவு செய்து அழகுராஜாவை கைது செய்தார்.


Next Story