டி.ஐ.ஜி. விஜயகுமார் உருவ படத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உருவ படத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி செலுத்தினார்.
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இறந்த டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு விஜயகுமார் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், சீனிவாசலூ, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விஜிகுமார், தேவராஜ், நாகராஜன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முகமது நிசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் செய்தி தொடர்பாளரும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருமான ராமச்சந்திரன், மற்றும் போலீஸ் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள், போலீசார் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இறந்த விஜயகுமார் கடந்த 29.6.2015 முதல் 30.7.2018 வரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.