போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி.ஆய்வு


போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி.ஆய்வு
x

ரோஷணை போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி.ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் உட்கோட்ட ரோஷணை போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அதனை விரைந்து முடிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, இன்ஸ்பெக்டர் பிருந்தா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story