போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
விருத்தாசலம் அருகே கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
கடலூர்
விருத்தாசலம்
விருத்தாசலம் போலீஸ் உட்கோட்டத்தில் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சாம்பாரில் விஷம் வைத்து 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தி தொடர்புடைய நபர்களை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம், ஏட்டுகள் சிவசக்தி, மகேஷ், போலீஸ்காரர்கள் செல்வக்குமார், சத்தியகுமார், சந்திரகலா ஆகியோரை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் பாராட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story