போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு


போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
x

போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தொழில் அதிபர் சந்திரசேகரன் கடத்தல் வழக்கில் போலீசார் துரிதமாக செயல்பட்டு 7 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட 6 மணி நேரத்தில் தொழில் அதிபரை மீட்டனர். இந்த சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்ரமணியன், இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், ரமேஷ், செந்தில்மாறன் உள்பட சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று நேரில் வரவழைத்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா, ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story