கல்வாயை தூர்வாரி, சிறு பாலம் கட்டும் பணி


கல்வாயை தூர்வாரி, சிறு பாலம் கட்டும் பணி
x

கல்வாயை தூர்வாரி, சிறு பாலம் கட்டும் பணியை நகரமன்ற தலைவர் ஆய்வுசெய்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு பஜார் வீதியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் பெரிய கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் மழை காலங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலைகள் பழுதாகிறது. இந்த கால்வாயை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கால்வாய் தூர்வாரப்பட்டு புதிதாக சிறு பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனை நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சிறு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல் நகரின் முக்கிய சாலைகளான வேலூர் மெயின் ரோடு, விநாயகர் தெரு, ராஜி தெரு ஆகிய பகுதிகளில் கால்வாய் தூர்வாரப்பட்டு சிறு பாலங்கள் அமைக்கப்பட்டன. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தடை இன்றி கால்வாயில் செல்கிறது.


Next Story