டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட மருத்துவ வாகனம் கள்ளக்குறிச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்


டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட மருத்துவ வாகனம்  கள்ளக்குறிச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட மருத்துவ வகானத்தை கள்ளக்குறிச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி கொடியசைத்து வாகனத்தை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து, கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் (2025)-ல் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கினை அடைந்திடும் பொருட்டு காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ரே பொருத்திய நவீன மருத்துவ வாகனத்தினை சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட காசநோய் கண்டறியும்கருவி பொருத்தப்பட்ட வாகனத்தை மாவட்டத்தை சேர்ந்த மக்களின் பயன்பாட்டிற்காக தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ குழு

மேலும் இந்த வாகனத்தில் மருத்துவ குழுவினருடன் கிராமங்கள் முழுவதும் சென்று, காசநோய் கண்டறிதல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள், புகைப்பிடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சிறுநீரகம் தொடர்பான நோய் உடையவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர். எனவே இதை மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.


நிகழ்ச்சியில் இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பாலச்சந்தர், துணை இயக்குனர் (காசநோய்) சுதாகர், துணை இயக்குனர் பொது சுகாதாரம் ராஜா, நெஞ்சக நோய் நிபுணர் ராம்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக்கண்காணிப்பாளர் நேரு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை, உதவி மருத்துவ அலுவலர் பொய்யாமொழி, தேசிய சுகாதார குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story