ரூ.10 லட்சத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி


ரூ.10 லட்சத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி
x

ரூ.10 லட்சத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி

திருவாரூர்

மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நகர்த்தக்கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார் நேற்று தொடங்கி வைத்தார். ஒருமுறை எக்ஸ்ரே எடுத்தால் பின்னர் தேவைப்படும் உடல் பகுதியை தனித்தனியாக கணினி மூலம் பார்த்து எக்ஸ்ரே பகுப்பாய்வு செய்து கொள்ளும் வசதியுடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இந்த கருவி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே நகர்த்தி சென்று எக்ஸ்ரே எடுத்து பச்சிளம் குழந்தைகளின் உடல் நிலை குறித்து அறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் உமா, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் டாக்டர்கள் சரவணகுமார், வினோத், சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story