எருக்கன்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


எருக்கன்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எருக்கன்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த எருக்கன்குப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சாமி வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story