திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 26 March 2023 12:15 AM IST (Updated: 26 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் புது ஆதண்டார்கொல்லையில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 7-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பல்லக்கில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story