திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூரில் திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 2-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 7-ந் தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து தீமிதி திருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றம் நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story