மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

ராமநத்தம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக வெள்ளாற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கோவில் அருகில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story