நாக அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


நாக அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

தென்பசியார் நாக அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

விழுப்புரம்

திண்டிவனம்

நாக அங்காளம்மன்

திண்டிவனம் அருகே உள்ள தென்பசியார் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு நாக அங்காளம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 9-ம் ஆண்டு திருவிழா கடந்த 17-ந் தேதி கோவில் வளாகத்தில் உள்ள 108 விநாயகருக்கு சிறப்பு யாகத்துடன் சக்தி மாலை அணிவித்து, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 27-ந்தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தீமிதி திருவிழா

28-ந் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கன்னிமார் கோவிலுக்கு கரக புறப்பாடு, பால்குடங்களுடன் கரக வீதியுலா, அம்மனுக்கு கூழ் வார்த்தல், ஊரணி பொங்கல், அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அலகு குத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கஜெலட்சுமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சக்தி உபாசகர் ராம்குமார், அருள்வாக்கு சித்தர் அசோக்ராஜ் அடிகளார், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story