உத்திரமேரூர் ஸ்ரீ திரிசூலகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


உத்திரமேரூர் ஸ்ரீ திரிசூலகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரிசூலகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம்

விழாவையொட்டி காலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி யாக வேள்வி பூஜைகள் நடைப்பெற்றது.

பின்னர் திருவிளக்கு பூஜை நடந்தது இதில் 1008 பெண்கள் கலந்து கொண்டு மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கவும், மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மாலை விரதமிருந்த பக்தர்கள் திருப்புலிவனம் குளக்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தில் மூட்டப்பட்டிருந்த தீகுண்டத்தில் தீமிதித்து அம்மனை வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட திரிசூலகாளியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவிற்கு திருப்புலிவனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story